கொரோனா பரவல் எதிரொலி - ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கு!

0 5831
கொரோனா பரவல் எதிரொலி - ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கு!

ஆந்திர மாநிலத்தில் வருகிற 5ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் எதிரொலி - ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கு

ஏற்கனவே அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அது போதிய அளவில் பலனளிக்காததால், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருகிற 5ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணியில் இருந்து மறு நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதை தடுக்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் வகையிலான அனைத்து இடங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments