சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாகும் பழைய அமைச்சர்கள் அறை : புதிய அமைச்சர்களுக்காக அறைகளை தயார் செய்யும் பணி தீவிரம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், சென்னை - தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் இருந்த ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு விட்டன.
அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத் தப்பட்டு,.வெளியே எடுத்துச்செல்லப்பட்டன.
அமைச்சர்கள் அறைகளின் வாசலில் இடம் பெற்றிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு, அதில் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்களும் அழிக்கப்பட்டு உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறும் புதிய அமைச்சர்களுக்காக தலைமைச் செயலகத்தில் அறைகள் தயார் செய்யும் பணி, மற்றொரு பக்கம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
Comments