முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் தேர்வை 4 மாதம் தள்ளி வைக்கும் முடிவுக்குப் பிரதமர் ஒப்புதல்
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வைக் குறைந்தது 4 மாதங்களுக்குத் தள்ளி வைக்கும் முடிவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏப்ரல் 18ஆம் நாள் நடத்தத் திட்டமிட்டிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கொரோனா சூழலில் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் பங்கேற்க வசதியாக இந்தத் தேர்வைக் குறைந்தது 4 மாதங்களுக்குத் தள்ளி வைக்கலாம் என்கிற முடிவுக்குப் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
கொரோனா சிகிச்சையில் நூறு நாட்கள் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கவும், மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி மருத்துவர்களைக் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தவும் முடிவெடுத்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Comments