இந்தியாவின் கொரோனா நிலவரத்தை கேலி செய்து வலை பதிவு : கண்டனத்தை தொடர்ந்து அவதூறு பதிவை நீக்கியது சீனா

0 4058
இந்தியாவின் கொரோனா நிலவரத்தை கேலி செய்து வலை பதிவு : கண்டனத்தை தொடர்ந்து அவதூறு பதிவை நீக்கியது சீனா

ந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அவமரியாதையான வகையில் வெளியிட்ட சமூகவலைதள பதிவை பலத்த கண்டனங்களை தொடர்ந்து சீனா நீக்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் கூட்டம் கூட்டமாக எரியூட்டப்படும் படங்களுடன், அண்மையில் சீனா விண்ணுக்கு அனுப்பிய டியான்ஹி (Tianhe) விண்வெளி நிலைய கட்டுமான கலத்தின் படத்தையும் வெளியிட்டு அந்த பதிவு வெளியிட்டது.

அதில் சீனா ராக்கெட்டை எரியூட்டி விண்கலத்தை அனுப்பும் போது இந்தியா சடலங்களை எரியூட்டுகிறது என்ற வாசகங்களும் இடம் பெற்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் விவகார குழு இந்த பதிவை வெளியிட்டது. இதற்கு சீன நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்ததால் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments