ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ஆல்கஹால் அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்

0 3219
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு,ஆல்கஹால் அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்

த்தத்தில் சர்க்கரையின் அளவு, மது அருந்தியிருந்தால் ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு உள்ளிட்டவற்றை அறிய உதவும் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் (Rockley Photonics) என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது போன்று இந்த வாட்சில் ரத்த அழுத்தத்தை கண்டறியும் தொழில்நுட்ப சென்சார்களும் இருக்கும் என கூறப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் மது அருந்துவோருக்கு இந்த வாட்ச் வரப்பிரசாதமாக இருக்கும் என்றாலும், விலை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments