சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகல்

0 5663
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகல்

மிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விஜய் நாராயண் விலகியுள்ளார்.

அதற்கான கடிதத்தைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் சட்டத்துறைச் செயலாளருக்கும் அனுப்பியுள்ளார். இதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக இருந்த சோமையாஜி, முனுசாமி, சண்முக சுந்தரம் ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தைத் தலைமைச் செயலருக்கும் சட்டத்துறைச் செயலருக்கும் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments