தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது தி.மு.க..! அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி
10 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி மலர உள்ளது. ஐந்துமுறை கலைஞர் தலைமையில் ஆட்சி நடைபெற்ற நிலையில், தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
2006 முதல் 2011 வரை தி.மு.க.ஆட்சி நடைபெற்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அ.திமு.க. தலைமையிலான அரசு நீடித்து வந்தது. இந்நிலையில், இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
பெரும்பான்மைக்கு 117 இடங்களே தேவைப்பட்ட நிலையில், 125 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக தனித்து 174 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.திமுக கூட்டணியில் காங்கிரஸ். மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய மக்கல் கட்சி மற்றும்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.
இக்கட்சிகளும் தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments