”இந்தியாவில் ஜூலை மாதம் முதல் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும்” -சீரம் இந்தியா சிஇஓ அதார் பூனாவாலா
இந்தியாவில், அடுத்த சில மாதங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தற்போது மாதம் ஒன்றுக்கு தமது நிறுவனம் 6 முதல் 7 கோடி தடுப்பூசி டோசுகளை மட்டுமே தயாரித்து வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
வரும் ஜூலை மாதம் அது 10 கோடியாக உயர்த்தப்பட்ட பின்னர் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என அவர் தெரிவித்தார். 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நோக்கத்துடன், சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 3000 கோடி முன்பணத்துடன் கடந்த மாதம் ஆர்டர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Comments