தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்..
போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். 9வது முறையாக சட்டமன்றத்திற்கு அவர் தேர்வாகி உள்ளார்.
திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி உதயகுமார் வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட தங்கமணியும், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.எஸ் மணியனும் வெற்றி பெற்றுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்ட கே.பி. அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றுள்ளார். நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட ஆர் காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி. வேலுமணியும், ஆரணி தொகுதியில் சேவூர் ராமச்சந்திரனும் வெற்றிபெற்றனர்
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட டி.ஜெயக்குமார் தோல்வியடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட ராஜலட்சுமி தோல்வியடைந்துள்ளார்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் தோல்வியடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட கே.டி. ராஜேந்திரபாலாஜியும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி. சண்முகமும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட எம்ஆர் விஜயபாஸ்கரும் தோல்வியடைந்துள்ளனர்.
Comments