கொரோனா பரவல் காரணமாக ஜிஎஸ்டி வரி செலுத்தோவருக்கு சலுகைகள் !

0 3335

பெருந்தொற்றின் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு 18 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்திற்கு பதிலாக, 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பதிவு செய்யப்பட்ட நபர்கள், 5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்கள், கலவைத் திட்டத்தின் கீழ் வரி செலுத்த விருப்பம் தெரிவித்துள்ள நபர்கள் ஆகிய பிரிவினருக்கு தனித்தனியே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாமதமாக வரி செலுத்துவோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தைத் தாக்கல் செய்வது மற்றும் ஜனவரி - மார்ச் மாத காலாண்டிற்கான ஐடிசி-04 படிவத்தை வழங்குவதற்கான இறுதி தேதி மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments