தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!

0 4679

தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு தேசியக் கட்சித் தலைவர்களும், மாநில முதலமைச்சர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் அமோக வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஒன்றுபட்டு போராடுவோம் என்றும் பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மாநில மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வோம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவை தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் தலைமையில் மாற்றத்திற்கான திசையில் முழு நம்பிக்கையுடன் காலெடுத்து வைப்போம் என்றும் தமது டிவிட்டர் செய்தியில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரிய ஜனதாக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், (( GFX IN )) கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துவதாக ரஜினி தெரவித்துள்ளார்..

 மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நெருக்கடியான காலக்கட்டத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தமது ட்விட்டர் பதிவில் கமல் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments