தமிழகத்தில் மலர்ந்தது திமுக ஆட்சி ... முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது. தமிழக முதலமைச்சராக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்பட்டு , முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், திமுக கூட்டணி தொடர்ந்து
முன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 199 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணி 135 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
தி.மு.க. கூட்டணி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணியில், மயிலாடுதுறை, உதகை உள்ளிட்ட தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
செய்யூர், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளை கைப்பற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
Comments