தமிழக மக்களின் தீர்ப்பை பா.ஜ.க. தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறது: அமைச்சர் அமித்ஷா

0 5422

தமிழக மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையில் மாநில முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று கூறி உள்ளார்.தேர்தலில் கடுமையாக உழைத்த பாஜகவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments