ஜிஎஸ்டி வரலாற்றில் கடந்த மாதம் ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்.. !
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து அதன் வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
இதை நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதில் , 27 ஆயிரத்து 837 கோடி ரூபாய் மத்திய ஜிஎஸ்டி என்றும் 35 ஆயிரத்து 621 கோடி ரூபாய் மாநில ஜிஎஸ்டி என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 68 ஆயிரத்து 481 கோடி ரூபாயும், செஸ் வரியாக 9 ஆயிரத்து 445 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது. மார்ச் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி வரி வருவாயை விட ஏப்ரல் மாதம் 14 சதவிகிதம் அதிக வரி வசூலாகி உள்ளது
Comments