ஜிஎஸ்டி வரலாற்றில் கடந்த மாதம் ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்.. !

0 7094

ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து அதன் வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

இதை நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதில் , 27 ஆயிரத்து 837 கோடி ரூபாய் மத்திய ஜிஎஸ்டி என்றும்  35 ஆயிரத்து 621 கோடி ரூபாய் மாநில ஜிஎஸ்டி என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 68 ஆயிரத்து 481 கோடி ரூபாயும், செஸ் வரியாக 9 ஆயிரத்து 445 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது. மார்ச் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி வரி வருவாயை விட ஏப்ரல் மாதம் 14 சதவிகிதம் அதிக வரி வசூலாகி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments