தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராகும் ஆப்கான் ராணுவத்தினர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மே ஒன்றாம் தேதியுடன் ஆப்கானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்குவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் உறுதியளித்திருந்த நிலையில், புதிய அதிபர் ஜோ பைடன் படை விலகலை செப்டம்பர் 11 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.
ஆத்திரம் அடைந்த தாலிபான்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினர். கடந்த சில நாட்களில் மட்டும், ஆப்கான் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கப் படையினர் தாக்கப்பட்டால், எதிர்தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
Comments