நில அபகரிப்பு புகார் எதிரொலி: தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் எட்டலா ராஜேந்தர் பதவியிலிருந்து விடுவிப்பு
தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தலைமை செயலாளருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆணையிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எட்டலா ராஜேந்தருக்கு பதிலாக மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளை முதலமைச்சரே கூடுதலாக நிர்வகிப்பார் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
மேடக் மாவட்டம் அச்சம்பேட்டை நகரில் நிலங்களை ஆக்கிரமித்ததாக எட்டலா ராஜேந்தர் மீது புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடுமாறு தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தியிருந்தார்.
Comments