தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் 30 மணி நேர முழு ஊரடங்கு
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் 30 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
30 மணி நேர முழு ஊரடங்கி போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை என்பதால், முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகள், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கும், உணவு விநியோகத்தில் ஈடுபடுவோருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments