தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

0 5233

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 625 பேர், புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழ்நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. புதிதாக 19,588 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 17,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . சென்னையில் 47 பேர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 147பேர் உயிரிழந்தனர்.

மேற்குவங்காளம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 30பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 5,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,445 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,257 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருநெல்வேலி - 812, திருவள்ளூர் - 779, மதுரை - 711, தூத்துக்குடி - 638, திருச்சி - 528 , தஞ்சாவூர் - 492, திருப்பூர் - 438 , கிருஷ்ணகிரி - 423 மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் - 332 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 625 சிறுவர், சிறுமிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,17,405 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிரார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments