மோட்டார் ரூமில் என்ன சத்தம்…? எட்டிப்பார்த்த மூதாட்டி கொலை..! பாட்டியை கூட விட்டுவைக்காத கொடுமை

0 83963
மோட்டார் ரூமில் என்ன சத்தம்…? எட்டிப்பார்த்த மூதாட்டி கொலை..! பாட்டியை கூட விட்டுவைக்காத கொடுமை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 94 வயது மூதாட்டி தென்னந்தோப்பு மோட்டார் ரூம் சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியநேந்தல் கிராமத்தை சேர்ந்த 94 வயது மூதாட்டியான காளி முத்தம்மாள் தனது தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் ரூமில் மொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார் அவர் அணிந்திருந்த 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டனர்

காளி முத்தம்மாளின் தென்னந்தொப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்புவரை வேலைபார்த்து வந்த முத்துராக்கு என்ற பெண் வேலையை விட்டு நின்று விட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது மூதாட்டியின் கதையை முடித்த மோட்டார் ரூம் காதல் ஜோடியின் கொடூரச்செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

இரு வாரங்களுக்கு முன்பு முத்துராக்கு தென்னந்தோப்பில் வேலை பார்த்து வந்த சமயம், ஒரு நாள் மோட்டார் ரூமில் இருந்து பேச்சு சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட மூதாட்டி காளி முத்தம்மாள் அங்கு சென்று எட்டிப்பார்த்த போது முத்துராக்கு, அதே பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதனை கண்டித்த காளி முத்தம்மாள், நடத்தை சரியில்லாத முத்துராக்குவை பணியில் இருந்து நிறுத்தியதாக கூறப்படுகின்றது. தோப்பு வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் வேறு வேலை கிடைக்காமலும், செலவுக்கு பணமின்றியும் தவித்து வந்த முத்துராக்கு, எப்போதும் கழுத்து மற்றும் காதுகளில் நகையுடன் வலம் வரும் காளி முத்தம்மாளை தீர்த்துக் கட்டி நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று காதலன் வடிவேலுவுடன் தோப்புக்குள் புகுந்து மோட்டார் ரூமுக்குள் பதுங்கி இருந்த முத்துராக்கு, ஆகிய இருவரும் சேர்ந்து தனியாக அங்கு வந்த மூதாட்டி முத்துக்காளியம்மாளை சுவற்றில் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

காதில் அணிந்திருந்த கம்மலை கழட்டிப்பார்த்தும் வராததால், காதோடு சேர்த்து அறுத்துச்சென்றதும் தெரியவந்தது. காதலி முத்துராக்கு கொடுத்த தகவலின் பேரில் மதுக்கடை ஒன்றில் மூக்கு முட்ட குடித்து விட்டு புலம்பிக் கொண்டிருந்த காதலன் வடிவேலுவையும் போலீசார் தட்டி தூக்கினர். முத்துராக்கு வீட்டில் இருந்து மூதாட்டியின் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

அதே நேரத்தில் தனிமையில் வசிக்கின்ற வயதான மூதாட்டிகள் பிறர் கண்ணை உருத்துகிற மாதிரி நகைகளை அணிவது அவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதற்கு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவமே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments