தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60ஆயிரத்தை எட்ட வாய்ப்பு: சிறப்பு அதிகாரி
தமிழகத்தில் வரும் நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டும் என்பதால், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில், வாரம் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்த பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னையில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக அவர் கூறினார்.
சென்னையில் முன்கள பணியாளர்கள் 619 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளதாகவும், 90 விழுக்காடு முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து இருப்பு 100 சதவீதம் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தட்டுப்பாடு இருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
Comments