கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்துக்காக 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் மக்கள்

0 3887
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்துக்காக 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் மக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 20 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து கொரோனாவுக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை வாங்க மருத்துவர்கள் வழங்கிய பரிந்துரை கடிதத்துடன் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு ரெம்டிசிவிர் மருந்து வழங்கப்படும் நிலையில், அவர்களில் 250 பேர் முந்தைய நாள் டோக்கன் பெற்றவர்களாவர்.

தங்களது டோக்கன் எண் வந்தவுடன் மருந்துக்காக காத்திருப்போர் பரிதவிப்புடன் ஓடிச்சென்று ரெம்டிசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments