சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.1.88 கோடிக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை

0 3516
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.1.88 கோடிக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 1 கோடியே 88 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இரவு பகலாக காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.

அங்கு இதுவரை 12 ஆயிரம் வயல்கள் விற்பனையாகியிருப்பதாகவும், இதன் மதிப்பு ஒரு கோடியே 88 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments