18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் இயக்கம் : 6 மாநிலங்களில் இன்று தொடங்கியது
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் 6 மாநிலங்களில் இன்று தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் மே 1 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பல மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி இயக்கம் தொடங்கவில்லை. அதே நேரத்தில் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிரத்துக்கு மூன்று லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 3 மாவட்டங்களிலும், குஜராத்தில் 10 மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ளது.
இந்த மாநிலங்களுக்குத் தலா மூன்று லட்சம் டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்குத் தலா ஒன்றரை லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
Comments