திம்பம் சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து - வனத்துறை அறிவிப்பு

0 2207
திம்பம் சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து - வனத்துறை அறிவிப்பு

ரோடு மாவட்டம் திம்பம் சோதனைச்சாவடி வழியாக தலமலை வனச்சாலையில் தாளவாடி செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக தாளவாடி மலைப்பகுதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை.

இதனால் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் காய்கறி பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திம்பம் சோதனை சாவடி வழியாக தலமலை வனச்சாலையில் தாளவாடி மலைப் பகுதிக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில் அங்கு வனத்துறையினர் அனைத்து வாகனங்களுக்கும் வழக்கம்போல் நுழைவு கட்டணம் வசூலித்ததால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா தொற்று காலங்களில் மாற்று பாதையாக பயன்படுத்தும்போது இதுபோன்று வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அவர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments