மதுரை அருகே கொரோனா காரணமாக மீன்பிடி திருவிழாவுக்கு தடை : தடையை மீறி மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
கொரோனா காரணமாக திருவாதவூர் பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனை மீறியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவு முதலே திருவாதவூர் பெரிய கண்மாயில் குவிந்து, கொரோனாவை மறந்து அலட்சியமாக மீன்பிடித்துச் சென்றனர்.
கட்லா, விரால், ஜிலேபி, கெழுத்தி, உளுவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிக அளவில் சிக்கின.
Comments