ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க களமிறங்கிய கடற்படை..! பஹ்ரைனில் இருந்து 40 டன் திரவ ஆக்ஸிஜன் டேங்கர்கள் மும்பை வந்தன
நாடு முழுவதும் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினைப் போக்க கடற்படையும் களமிறங்கியுள்ளது.
ஐ.என்.எஸ் கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ் தல்வார் ஆகிய இரண்டு கப்பல்கள் பஹ்ரைனில் உள்ள மனாமா துறைமுகத்தில் இருந்து 40 டன் திரவ ஆக்ஸிஜன் அடங்கிய டேங்கர்களை மும்பை கொண்டு வந்துள்ளது.
இதேபோல் ஐஎன்எஸ் ஜலஷ்வா என்ற போர்க் கப்பல் ஆக்ஸிஜனை கொள்முதல் செய்ய பாங்காங் சென்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்ஸிஜன் டேங்கர்கள் விமானம் மற்றும் ரயில்கள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் ஆக்ஸிஜன் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments