போலந்தில் உலகின் முதல் கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு..! 20 வயதான இளம் மம்மி என ஆராய்ச்சியாளர்கள் தகவல்
உலகில் முதல் முறையாக போலந்து நாட்டில் கருவுற்ற நிலையில் உள்ள மம்மியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
19-ஆம் நூற்றாண்டில் போலாந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மம்மியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். மம்மியின் உடல் வாகுவை கொண்டு பாதிரியர் என்று குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக மம்மி ஒரு கர்ப்பிணி பெண் என்பது தெரிய வந்தது.
மேலும் மம்மிக்கு 20 வயது இருக்கலாம் என்றும் அதன் வயிற்றில் 26 முதல் 28 வார சிசு இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் உலகில் கண்டறியப்பட்ட மம்மிகளில் மிகவும் பாதுக்காக்கப்பட்ட கர்ப்பிணி மம்மி இது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Comments