ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.24 லட்சம் கோடி என தகவல்
ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரிவசூல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 6 மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் புது உச்சம் தொட்டு ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது.
இந்த நிலையில் கொரோனா அச்சுற்றுத்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல் போன்ற காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் வரி வசூல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கி பொருளாதார நிபுணர் தெரிவித்து உள்ளார்.
மேலும் இ- வே பில் எனப்படும் மின்சார வழி வர்த்தக சீட்டு மூலம் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments