குஜராத் மருத்துவமனை தீவிபத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 12 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர்.
பரூச் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் நலன்புரி மருத்துவமனையின் முதல் தளத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நெருப்பு மற்றும் புகையால் சூழப்பட்டு 12 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த அண்டை கிராமத்து மக்களும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து 50க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றினர். அதில் சிலருக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments