வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..! வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதி என தேர்தல் ஆணையம் உத்தரவு

0 2780
வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..! வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதி என தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் கடந்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் இறங்கிய இத் தேர்தலில், 72 புள்ளி 78 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படத் தொடங்கும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

இதற்கான பணியில் 16 ஆயிரத்து 387 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முற்பகலில் முன்னணி நிலவரங்கள் வெளியாகத் தொடங்கும். இரவுக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாகப் பின்பற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாகு தெரிவித்துள்ளார்.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று இரவில் இருந்தே அவர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments