பன்னாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு மே 31 வரை தடை

0 8657
பன்னாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு மே 31 வரை தடை

பன்னாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடையை மே 31 வரை விமானப் போக்குவரத்து இயக்ககம் நீட்டித்துள்ளது.

பன்னாட்டுச் சரக்கு விமானங்களுக்கும், இயக்ககத்தால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments