ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக செத்து மடிந்த மீன்கள்.. லெபனான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
மேற்கு ஆசிய நாடான லெபனானில், ஒரே நேரத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.
Qaraoun என்ற நகரில் உள்ள Litani என்ற ஏரி அண்மைக்காலமாக மாசு காரணமாக பெரிதும் பாழ்பட்டு, சீரழிந்துள்ளது.
குப்பை -கூளங்கள் ஏரியில் கொட்டப்பட்டதால், ஏரி தண்ணீர் மாசடைந்து விட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 40டன் மீன்கள் செத்து, கரை ஒதுங்கின.
இவ்வாரு, மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் அதிர்ச்சி அடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, லெபனான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments