18 வயதோருக்கான தடுப்பூசி திட்டம் நாளை தொடங்கப்படாது: ஆணையர் பிரகாஷ்

0 3160

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பாதிப்பு 3 மடங்கு அதிகமாக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பாதிக்கப்பட்ட  10 முதல் 13சதவீதம் பேருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், 4000 பேர் வரை மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கும் என வல்லுநர்கள் தெரிவிப்பதாக கூறிய ஆணையர் பிரகாஷ், போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் நாளை தொடங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments