கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்... 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது நடைபெற்றதை சுட்டிக்காட்டி.. அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கோரிக்கை

0 10459
ஊடகங்களில் வெளியாகி உள்ள எக்சிட் போல் கணிப்புகள், அதிமுகவினரை சோர்வடைய செய்வதற்கான முயற்சிகள் என்றும், அதை நம்பி விடாமல் துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் எனவும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்சிட் போல் முடிவுகள் அதிமுகவினருக்கு  எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

2016 தேர்தலில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று சொன்னாலும் இறுதியில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் தில்லுமுல்லு நடக்காமல் விழிப்புடன் கண்காணிக்குமாறு அவர்கள் கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments