மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..! விளம்பரத்திற்காக, அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடர்வதா என மனுதாரருக்கு கண்டனம்

0 2314
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..! விளம்பரத்திற்காக, அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடர்வதா என மனுதாரருக்கு கண்டனம்

மே 2 ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அரசியல் கட்சிகளின் சார்பில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

விளம்பரத்திற்காக கிருஷ்ணசாமி இப்படி ஒரு வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அற்ப காரணங்களுக்காக இது போன்று வழக்கு தொடர்வதை தவிர்க்க வேண்டும் என கிருஷ்ணசாமிக்கு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments