அகமதாபாத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு இந்தியக் கடற்படையின் மருத்துவக் குழு

0 1873
அகமதாபாத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு இந்தியக் கடற்படையின் மருத்துவக் குழு

கமதாபாத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு இந்திய கடற் படையைச் சேர்ந்த 57 பேர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று அகமதாபாத் சென்றடைந்த இந்தக் குழுவில், 4 மருத்துவர்கள், 7 செவிலியர், 26 மருத்துவப் பணியாளர்கள், 20 மருத்துவ உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.

கடற்படை மருத்துவக் குழு அங்கு இரண்டு மாத காலத்திற்குப் பணியாற்ற உள்ளதாகவும், தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments