அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட "ரெம்டெசிவிர்" மருந்துகள் : 100 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்களை கைப்பற்றிய போலீசார்

0 2161
அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட "ரெம்டெசிவிர்" மருந்துகள் : 100 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்களை கைப்பற்றிய போலீசார்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா நோக்கி வந்த அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 100 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் காரிகபாடி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீசார், ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி வந்த அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் சுப்பாராவ், அஜய்குமார் என்ற இரண்டு பயணிகள் கொண்டு வந்த பையில், 100 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் இருந்துள்ளன.

அரசு சார்பில் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மருந்தை கள்ளச்சந்தையில் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஹைதராபாத் லேண்ட்மார்க் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர் பவ்யா என்பவரது உதவியுடன் இந்த மருந்து கடத்தல் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments