காசிமேட்டில் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மீன்கள், இறைச்சி வாங்கக் குவிந்த அசைவ பிரியர்கள்..!
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி, மீன்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த காசிமேட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் இன்று குவிந்தனர்.
அதிகாலையில் இருந்தே மார்க்கெட்டில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி கூடியதால் திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது. இதையடுத்து தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைக்காரர்களை போலீசார் எச்சரித்ததோடு, மாஸ்க் அணியாதோருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
Comments