கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஏராளமானோர் வரிசையில் காத்திருப்பு

0 2420
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஏராளமானோர் வரிசையில் காத்திருப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க, சுமார் 2ஆயிரம் பேர் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு மருந்து வாங்க நாள்தோறும் இரவு பகலாக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். நேற்றில் இருந்தே காத்து கிடப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

2 கவுண்டர்களில் மட்டுமே மருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக கவுண்ட்டர்களை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது. அதிக கூட்டம் சேராமல் தடுக்க காவலர்களும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments