கோவையில் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்..! ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதாகப் புகார்
கோவையில் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரவு 10 மணிக்கு மேல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து ஒடிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Comments