குஷிப்படுத்திய குதிரை சவாரி..! வாழ்வாதாரத்திற்கு போராடும் குதிரை வண்டிக்காரர்கள்...
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதிரை சவாரியை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ஊரடங்கு அறிவிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குதிரை வண்டிக்காரர்கள்
மெரினா கடற்கரை தொடங்கி ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோரின் விருப்பம், ஒருமுறையாவது குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பது தான்..
ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், குதிரை வண்டி தொழில் நலிவடைந்து உள்ளது.
சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு போடப்பட்டதாலும், திருமணம், திருவிழா உள்ளிட்ட வைபங்களை விமரிசையாக கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதாலும் விழிபிதுங்கி நிற்கின்றனர் குதிரை வண்டிக்காரர்கள்.
ராமேஸ்வரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் குதிரை வண்டிக்காரத் தொழிலில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்போது ஒருசிலர் மட்டுமே அத்தொழிலில் நீடித்து வருகின்றனர்
நாளொன்றுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை குதிரைகளுக்கு செலவு செய்தாக வேண்டும் என்ற சூழல் இருப்பதால் தங்களின் குடும்பம் அரைவயிற்றை நிரப்புவதற்கே அல்லல் படுவதாக வேதனை தெரிவிக்கிறார் இவர்..
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் குதிரை வண்டிக்காரர்கள்.
Comments