தமிழ்நாட்டில் தேவையை விட 3 மடங்கு ஆக்ஸிஜன் சேமிப்பில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 1994
தமிழ்நாட்டில் தேவையை விட 3 மடங்கு ஆக்ஸிஜன் சேமிப்பில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மிழ்நாட்டில் தேவையை விட 3 மடங்கு ஆக்ஸிஜன் சேமிப்பில் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதிகள் உடன் கூடிய 150 படுக்கை மற்றும் 100 சாதாரண படுக்கை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா நோய் பாதித்த 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாக கூறினார்.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அடுத்த பத்து நாட்களுக்கு மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments