வாக்கு எண்ணும் பணிகள் எப்படி நடைபெறும் ? அதற்கான நடைமுறைகள் என்னென்ன ? முழுவிவரம்..!

0 4761
வாக்கு எண்ணும் பணிகள் எப்படி நடைபெறும் ? அதற்கான நடைமுறைகள் என்னென்ன ? முழுவிவரம்..!

மிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2 ஆம் தேதி 75 மையங்களில் நடைபெற உள்ளது.

ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் 4 அல்லது 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, கூண்டு அமைத்து 14 மேசைகள் போடப்படும்.

பெரிய தொகுதியாக இருந்தால் மேசை எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு மேசையிலும் தேர்தல் அலுவலர் ஒருவர் இருப்பார்.

ஒரு வேட்பாளருக்கு 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் வாக்கு எண்ணிக்கையின் போது உடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

முகவர்கள் அனைவரும் கூண்டுக்கு வெளியே இருப்பார்கள்.

வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு எந்திரம் மட்டுமே மேசையில் வைக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவாகி இருக்கும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு எந்திரத்தை முகவர்களுக்கு உயர்த்தி காண்பிப்பார். அதில் உள்ள பட்டனை அழுத்தியதும் எந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி, வேட்பாளர்கள் எத்தனை பேர், மொத்தம் பதிவான வாக்குகள், எந்த வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்கள் திரையில் அடுத்தடுத்து தெரியும்.

அதனை முகவர்கள் குறித்துக் கொள்வார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்பீட்டு வித்தியாசம் இருந்தால் முகவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

கடைசியாக நோட்டாவில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும். அனைத்தையும் கணக்கிட்ட பின் எந்திரம் மூடி பாதுகாப்பாக வைக்கப்படும்.

14 மேசைகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் ஒரு சுற்று முடிந்ததாக கருதப்படும். அதனைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் 14 மேசைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு எந்திரம் வைக்கப்படும்.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுற்றுகள் எண்ணிக்கை இருக்கும். குறைந்தது 15 சுற்று, அதிகபட்சம் 30 சுற்று வரை வாக்கு எண்ணிக்கை செல்ல வாய்ப்புள்ளது.

பிற்பகலுக்குள் வெற்றி பெறப் போகும் வேட்பாளர் யார் என்ற முன்னணி விவரம் தெரிந்து விடும். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments