தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டியது

0 6408
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டியது

மிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 15,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்,

சென்னையை சேர்ந்த 40 பேர் உள்பட 107 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 24 பேர் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 39 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 5445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1164 பேருக்கும், கோயம்புத்தூரில் 1008 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருநெல்வேலியில் 849 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேருக்கும்,மதுரையில் 604 பேருக்கும், தூத்துக்குடியில் 576 பேருக்கும், ஈரோட்டில் 473 பேரும் திருச்சியில் 403 பேருக்கும், , கிருஷ்ணகிரியில் 371 பேரும் திருப்பூரில் 366பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 554 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,10,308 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments