கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு உதவ ரூ.150 கோடி - வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அறிவிப்பு

0 4621
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு உதவ ரூ.150 கோடி - வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அறிவிப்பு

கொரோனா தொற்றின் 2வது அலைக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு உதவ 150 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்படும் வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 10 நகரங்களில் நெருக்கடி சிகிச்சைக்கான ஆயிரம் படுக்கைகள் கொண்ட கூடுதல் திறனை வேதாந்தா நிறுவனம் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வசதிகளின் முதல் கட்டம் 14 நாட்களுக்குள் தயாராகிச் செயல்பட வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments