ரெம்டெசிவிர் மருந்தை வாங்க 4ஆவது நாளாக குவிந்த மக்கள், பல மணி நேரம் காத்திருந்தும், மருந்தை வாங்க முடியாததால் வேதனை
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்காக காலை முதல் நீண்ட நேரம் காத்திருந்தும், மருந்து வாங்க முடியாததால் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நீடிப்பதால், அதனை வாங்குவதற்காக வெளிமாவாட்டங்களில் இருந்தும் ஏரளமானோர் வருகின்றனர். இதனால் 4வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கினர். இரண்டு கவுன்ட்டடர்கள் அமைக்கப்பட்டு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 6 குப்பி மருந்து வழங்கப்படுகிறது. 6 குப்பியின் விலை 9 ஆயிரத்து 408 ரூபாய்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே ரெம்டிசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மறுநாள் மருந்து வழங்கப்படும். மாலை வரை காத்திருந்தும் மருந்து பெற முடியாததால் பலர் வேதனை அடைந்தனர்.
Comments