வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

0 5811

வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டது கொரோனா தொற்று அதிக அளவில் பரவ மிக முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவற்றால் கொரோனா தொற்று குறையும் என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாததைக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments