3 நாடுகளில் இருந்து 12 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் இந்தியா வருகை
பாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இருந்து தலா மூன்று, துபாயில் இருந்து 6 என மொத்தம் 12 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் இந்தியா கொண்டுவரப்படுகின்றன.
இந்த 3 நாடுகளில் இருந்தும் கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு 3 விமானப்படை விமானங்கள் இந்தியா வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இரட்டை சுவர் பாதுகாப்பு வசதியுடன், காற்றுபுகா தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கொள்கலன்களில் திரவ நிலையில் உள்ள அடர்த்தி மிக்க ஆக்சிஜனை சேமித்து கொண்டு செல்ல முடியும்.
மைனஸ் 90 டிகிரி செலிஷியஸ் வெப்பநிலையில், ஆக்சிஜனை குறைந்த செலவில், பாதுகாப்பாக எடுத்து செல்ல இந்த கொள்கலன்கள் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments