ஹெச்.டி.எப்.சி. ஏடிஎம் மையத்தில், பணம் நிரப்பியபோது வங்கி ஊழியர், பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டு துணிகர கொள்ளை
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த வங்கி ஊழியர் மற்றும் பாதுகாவலர் மீது பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குகட்பல்லி பகுதியில் எச்.டி.எப்.சி. வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு, வழக்கம்போல் பாதுகாவலர் உதவியுடன் வங்கி ஊழியர் பணம் நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர் மற்றும் பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குண்டடி பட்டு கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments